Tuesday, April 24, 2018

பிரபல தேசிய ஊடகத்தின் தமிழ்பதிப்பில் ஊடகவியலாளர் வேலை

பிரபல தேசிய ஊடகமான இ-டிவி பாரத் தமிழ்பதிப்பில் மூத்த ஊடகவியலாளர் வேலைக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பணி : OUTPUT HEAD -Tamil

பணி  இடம் : ஹைதராபாத்
அனுபவம் : 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்

பணி : BUREAU CHIEF -Tamil

 

பணி இடம் : தமிழ்நாடு

 அனுபவம் : 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்



மேலும் விபரங்களுக்கு http://recruitment.etvbharat.com/Etvbharath_careers/careers என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளவும்

etv bharat tamil recruitment

பி.இ, பி.டெக், படிப்புகளில் சேர மே 3 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம். உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

அண்ணா பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர மே 3ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்படுகிறது.

 ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். இந்த ஆண்டு புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்ததால், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே சமர்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் அந்தந்த மாவட்டத்திலுள்ள கலந்தாய்வு உதவி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் மொத்தம் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


Monday, April 23, 2018

போன் செய்தால் இலவசமாக வீட்டிற்க்கே வரும் நீட் தேர்வு மாதிரி வினாத்தாள்.


வெளி நாடுகளில் மருத்துவ படிப்புகளை ஏற்படுத்தி தருவதில் முன்னணியில் இருக்கும் லிம்ரா  ஓவர்சீஸ் எஜுகேஷனல் நிறுவனம், தமிழகத்திலுள்ள மாணவர்கள் 9952922333 இந்த நம்பருக்கு போன் செய்தால் அவர்களது வீட்டிற்க்கே இலவசமாக நீட் தேர்வு மாதிரி வினாத்தாள் அனுப்பப்படும் என லிம்ரா  ஓவர்சீஸ் எஜுகேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது .

பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Bharathiyar university admissions open)


 
பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் முதுநிலை பாடத்திட்டங்களான  M.Sc,    M.Com,  M.A, M.C.A  (Lateral  Entry), M.Ed,  B.P.Ed, M.P.Ed,  M.LibI.Sc, PG Diploma மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

தகுதிபெற்ற மாணவர்கள் மேற்கண்ட பாடத்திட்டங்களில் சேர்க்கை விண்ணப்பம், மற்றும் தகவல் தொகுப்பேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கட்டணம் கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள், இன்ன பிற தகவல்களை பல்கலைக்கழகத்தின் வலைதள முகவரியில் www.b-u.ac.in  
10-04-2018 முதல் 25-05-2018 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25-05-2018 மாலை 5.30 மணி.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Alagappa university Admissions open )


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் இளங்கலை பட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

2018-2019-ம் கல்வியாண்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் இளங்கலை பட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்
நுழைவுதேர்வு உள்ள பாடங்களுக்கு விண்ணபிக்க கடைசி நாள் :03-05-2018
நுழைவுதேர்வு அல்லாத பாடங்களுக்கு விண்ணபிக்க கடைசி நாள் : 28-05-2018


பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை


மேலும் விபரங்களுக்கு : http://alagappauniversity.ac.in/   என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Alagappa university admission 2018-19

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Bharathidasan University Admissions open )



திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு மற்றும் ஆறாண்டு பட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

2018-2019-ம் கல்வியாண்டில் திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு மற்றும் ஆறாண்டு பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் :07-05-2018

பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை


மேலும் விபரங்களுக்கு : http://www.bdu.ac.in/  என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Periyar University Admissions open )

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


“பெரியார் பல்கலைக்கழகத்தில் 28 முதுகலைப் பாடப் பிரிவுகளும், ஒரு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பாடப் பிரிவும், இரண்டு பி.ஒக்  பாடங்களும், மூன்று சான்றிதழ்- பட்டயப்படிப்புகளும் இந்தக் கல்வியாண்டில் கற்பிக்கப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் முதுகலைப் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், தகவல் தொகுப்புகளை பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 எம்பிஏ படிப்புக்கு ரூ.750, எம்சிஏ மற்றும் எம்.எட் படிப்புக்கு ரூ. 500, எம்.ஏ. எம்.எஸ்ஸி பாடங்களுக்கு ரூ.300, பி.ஒக் பாடங்களுக்கு ரூ.300 , இதர சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ரூ.100 - க்கான வங்கி வரைவோலை அல்லது வங்கி செலானை சமர்ப்பித்து மாணவர்கள் விண்ணப்பங்களை நேரடியாகப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது http://www.periyaruniversity.ac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரியக்கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை இணைத்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் பதிவாளர், பெரியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செலுத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஏதேனும் ஒரு பாடத்திற்கான விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழை சமர்ப்பித்து கட்டண விலக்கு பெறலாம். 

இந்தக் கல்வியாண்டில் எம்.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் என்ற ஐந்தாண்டு முதுகலைப் பாடப் பிரிவு மின்னணு ஊடகத்தை மையப் பொருண்மையாகக் கொண்டு தொடங்கப்படஉள்ளது. இப்பாடப் பிரிவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தில் மே 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் பாடங்களுக்கான நுழைவுத்தேர்வு மே 25-ஆம் தேதி நடைபெறும்.”


மேலும் விபரங்களுக்கு : http://www.periyaruniversity.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.



Periyar University Admissions open 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Manonmaniam Sundaranar University Admissions open )

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது 2018-2019-ம் கல்வியாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


விண்ணப்பங்கள் மற்றும் கட்டண விபரங்களை 22-04-2018 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23-05-2018
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 04-06-2018


விண்ணப்ப கட்டணம் : ரூ. 500

நுழைவு தேர்வு கட்டணம் : ரூ.150

பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை



மேலும் விபரங்களுக்கு : http://www.msuniv.ac.in/  அல்லது http://www.msuniv.ac.in/admission.aspx என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  விவரங்கள் 

Manonmaniam Sundaranar University Admissions open

Saturday, April 21, 2018

ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டர்/ ஸ்கிரிப்ட் ரைட்டர் வேலை

ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டர்/ ஸ்கிரிப்ட் ரைட்டர் வேலை
Source : AVM FB Page

Friday, April 20, 2018

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கல்வி; பெற்றோர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

ஏழை எளிய மக்களும் தங்களுடைய பிள்ளைகளை எந்த கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கலாம். இதற்கான வழியை அவர்களுக்கு அமைத்து தருகிறது 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்'. இதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 20-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 



இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய பிள்ளைகளை தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலேயே சேர்த்து படிக்க வைக்க விரும்புகின்றனர், இருந்தாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மெட்ரிக் கல்வி இப்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது. இத்தன்மையை மாற்றும் விதமாக அமைந்துள்ளது இச்சட்டம்.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 25 சதவிகித இடங்களில் சேரும் அனைத்துக் குழந்தைகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும். பெற்றோர்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும், சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஏற்கெனவே தங்களுடைய குழந்தையை எல்.கே.ஜி வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் தேதி : ஏப்ரல் 20 முதல் மே 18 வரை.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (www.dge.tn.gov.in)


தேர்வு செய்யும் முறை:

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கிட வேண்டும்.


  நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெற்றிருந்தால் இருந்தால் 23.05.2018 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட விண்ணப்பங்கள் குறைவாக இருந்தால் தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதார்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்புப் பட்டியலை 24.05.2018 பள்ளித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.  தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் 29.05.2018-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

Tuesday, April 17, 2018

உதவிதொகையுடன் லோக்சபாவில் பயிற்சி பெற அறிய வாய்ப்பு (Lok Sabha Internship Programme 2018)


மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி : உதவிதொகையுடன் லோக்சபாவில் பயிற்சி பெற அறிய வாய்ப்பு

லோக்சபாவில் உதவிதொகையுடன் இன்டன்ஷிப் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

லோக்சபாவின் செயல்பாடுகளை இந்திய குடிமகங்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் ஆண்டுதோறும் பட்டதாரி மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் மற்றும் ஒரு மாதம் இன்டன்ஷிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான இன்டன்ஷிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

உதவி தொகை:
மூன்று மாத பயிற்சி காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரமும், ஒரு மாத பயிற்சி காலத்தில் ரூ.20 ஆயிரமும் உதவிதொகையாக அளிக்கப்படும்.

வயது வரம்பு
21 வயது முதல் 30 வயது வரை

கல்வி தகுதி
இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் (such as social sciences, science, languages, environmental studies, law, journalism, finance, management, etc.)

விண்ணபிக்கும் முறை : ஆன்லைன்  (http://sri.nic.in/online-applications-lok-sabha-internship-programme-2018)
விண்ணபிக்க கடைசி நாள் : மே 04

மேலும் விபரங்களுக்கு: http://sri.nic.in
Advertisement for the Lok Sabha Internship Programme 2018.pdf

 Detailed Advertisement for Lok Sabha Intership Programme 2018.pdf



Lok Sabha Internship Programme 2018

நீட் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு (NEET EXAM 2018 - Admit Card released)


மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனபவே அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யும் முறை:
  • 1)        https://cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • 2)        பின்னர் அந்த இணையதளத்தில் Online Services என்ற ஆப்ஷனுக்கு கீழுள்ள Admit Card NEET(UG)-2018 அல்லது Candidate Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 3)        பின்னர் தேர்வாளர்கள் தங்களது Application/Registration No , Date Of Birth ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் ( https://cbseneet.nic.in/cbseneet/online/AdmitCardAuth.aspx )
  • 4)        தற்போது பிடிஎப் வடிவில் உங்களுடைய ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறும் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Keywords : cbse neet ,CBSE NEET 2018,CBSE NEET, Admit Card 2018,Central Board of Secondary Education,neet admit card 2018 , NEET exam, National Eligibility-cum-entrance Test 

Monday, April 16, 2018

10,+1,+2-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு (10,+1,+2 Exam Result date announced )

பத்தாம் வகுப்பு,  பதினொறாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்  வகுப்பு  பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது

அதன்படி, மே 16-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி பதினொறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் , மே 23 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி  கல்வித்துறை தெரிவித்துள்ளது

Sunday, April 15, 2018

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கல்வி; பெற்றோர் விண்ணபிக்கலாம் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு


திருநெல்வேலி மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இணையம் வழியாக விண்ணபிக்கலாம் என நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) இன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச்
சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

1. எதிர்வரும் 2018-2019ம் கல்வியாண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 431சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக்/மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) நுழைவுநிலை (எல்.கே.ஜி) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் 5469 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

2. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

3. முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர்/ மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்/ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்/ வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக்
கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

4. மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்வற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

6. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர் / எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர் /மூன்றாம் பாலினத்தவர் /துப்பரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

7. இணைய வழியாக பதிவு செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , இருப்பிடத்திற்கான ஆதாரச் சான்று ஆகிய சான்றிதழ்களுடன் குழந்தைகளின் புகைப்படமும் கொண்டுவர வேண்டும்.

8. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் வீடியோவை பார்க்கவும்
   

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கல்வி : அரசு அறிவிப்பு (RTE - 25% RESERVATION SEAT)

அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு தேதி தள்ளிவைப்பு

அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (AIEEA) தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர்  தெரிவிக்கப்படும் என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்)  (ICAR) அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்பில் சேர மாணவர்களுக்கு அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்)  (ICAR) நடத்துகிறது.  இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பது மட்டுமின்றி கல்விச் செலவுகளுக்காக உதவி தொகையும் வழங்கப்படுகிறது.


2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.ஏ.ஆர் வெளியிட்டுள்ளது. அதில்  +2 முடித்த மாணவர்களுக்கு மே 12 ம் தேதி சனிக்கிழமை தேர்வு நடைபெறும். முதுநிலை படிப்புக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும் மே 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர்  தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி
 :
இளநிலை UG படிப்பில் சேர
+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் தற்போது படித்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் +2 வகுப்பில் இயற்பியல், வேதிதியல், உயிரியல் அல்லது வேளாண்மை,  கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.


முதுநிலை PG படிப்பில் சேர
 வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு : 
http://www.icar.org.in
Keywords : All India Entrance Examination For Agriculture , AIEEA-2018,AIEEA,ICAR,Indian Council of Agricultural Research,

ICAR Postpones All India Entrance Exam For Agriculture Courses

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...