மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர
மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனபவே அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தநிலையில்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட்
தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யும் முறை:
- 1) https://cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- 2) பின்னர் அந்த இணையதளத்தில் Online Services என்ற ஆப்ஷனுக்கு கீழுள்ள Admit Card NEET(UG)-2018 அல்லது Candidate Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- 3) பின்னர் தேர்வாளர்கள் தங்களது Application/Registration No , Date Of Birth ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் ( https://cbseneet.nic.in/cbseneet/online/AdmitCardAuth.aspx )
- 4) தற்போது பிடிஎப் வடிவில் உங்களுடைய ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறும் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Keywords : cbse neet ,CBSE
NEET 2018,CBSE NEET, Admit Card 2018,Central Board of Secondary Education,neet
admit card 2018 , NEET exam, National
Eligibility-cum-entrance Test

No comments:
Post a Comment