சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும்
ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாணவர்
சேர்க்கை துவங்கியுள்ளது.
“பெரியார் பல்கலைக்கழகத்தில்
28 முதுகலைப் பாடப் பிரிவுகளும், ஒரு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பாடப் பிரிவும்,
இரண்டு பி.ஒக் பாடங்களும், மூன்று சான்றிதழ்-
பட்டயப்படிப்புகளும் இந்தக் கல்வியாண்டில் கற்பிக்கப்படுகிறது.
பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில்
பயிற்றுவிக்கப்படும் முதுகலைப் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
விநியோகிக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர்
சேர்க்கை விண்ணப்பங்கள், தகவல் தொகுப்புகளை பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
எம்பிஏ படிப்புக்கு ரூ.750, எம்சிஏ மற்றும் எம்.எட்
படிப்புக்கு ரூ. 500, எம்.ஏ. எம்.எஸ்ஸி பாடங்களுக்கு ரூ.300, பி.ஒக் பாடங்களுக்கு ரூ.300
, இதர சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ரூ.100 - க்கான வங்கி வரைவோலை அல்லது
வங்கி செலானை சமர்ப்பித்து மாணவர்கள் விண்ணப்பங்களை நேரடியாகப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்
கொள்ளலாம் அல்லது http://www.periyaruniversity.ac.in/
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்
உரியக்கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை இணைத்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு
நேரடியாக அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் பதிவாளர்,
பெரியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செலுத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி
இன மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஏதேனும் ஒரு பாடத்திற்கான விண்ணப்பப் படிவத்தை
உரிய சான்றிதழை சமர்ப்பித்து கட்டண விலக்கு பெறலாம்.
இந்தக் கல்வியாண்டில் எம்.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் என்ற ஐந்தாண்டு முதுகலைப் பாடப் பிரிவு மின்னணு ஊடகத்தை மையப் பொருண்மையாகக் கொண்டு தொடங்கப்படஉள்ளது. இப்பாடப் பிரிவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தில்
மே 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறும் பாடங்களுக்கான நுழைவுத்தேர்வு மே 25-ஆம் தேதி நடைபெறும்.”
மேலும் விபரங்களுக்கு : http://www.periyaruniversity.ac.in/
என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Periyar University Admissions open

No comments:
Post a Comment