Sunday, April 15, 2018

அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு தேதி தள்ளிவைப்பு

அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (AIEEA) தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர்  தெரிவிக்கப்படும் என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்)  (ICAR) அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்பில் சேர மாணவர்களுக்கு அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்)  (ICAR) நடத்துகிறது.  இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பது மட்டுமின்றி கல்விச் செலவுகளுக்காக உதவி தொகையும் வழங்கப்படுகிறது.


2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.ஏ.ஆர் வெளியிட்டுள்ளது. அதில்  +2 முடித்த மாணவர்களுக்கு மே 12 ம் தேதி சனிக்கிழமை தேர்வு நடைபெறும். முதுநிலை படிப்புக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும் மே 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அகில இந்திய வேளாண் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர்  தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி
 :
இளநிலை UG படிப்பில் சேர
+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் தற்போது படித்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் +2 வகுப்பில் இயற்பியல், வேதிதியல், உயிரியல் அல்லது வேளாண்மை,  கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.


முதுநிலை PG படிப்பில் சேர
 வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வேளாண்மை அல்லது வேளாண்மை சாந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு : 
http://www.icar.org.in
Keywords : All India Entrance Examination For Agriculture , AIEEA-2018,AIEEA,ICAR,Indian Council of Agricultural Research,

ICAR Postpones All India Entrance Exam For Agriculture Courses

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...