தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த ஆண்டு முதல் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டது. இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் முதல்தாள், இரண்டாம்தாள் என்ற முறைக்கு பதிலாக ஒரே தாளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேர்வெழுதும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடையும். புதிய அறிவிப்பின்படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Friday, December 28, 2018
Thursday, December 27, 2018
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம்.
10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தாள் பொதுத் தேர்வுகள், மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிபாட தேர்வுகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். தேர்வு நேர புதிய நடைமுறையை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Wednesday, December 26, 2018
NTA released UGC NET DEC 2018 Exam's Questions Paper and responses(Answer sheets of candidate)

Below video link shows "how to download your UGC NET DEC 2018 Exam's Questions Paper and responses"
Link: http://bit.ly/2CyZJib

நாசா காலண்டரில் இடம் பிடித்த பழநி பள்ளி மாணவனின் ஓவியம்.
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள காலண்டரில் பழநி பள்ளி மாணவனின் ஓவியம் இடம் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடுவது வழக்கம். 12 மாதங்களுக்கு 12 ஓவியங்கள் காலண்டரில் இடம் பெறும். இதற்கான ஓவியங்கள் உலக அளவில் போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். 4 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். 2019 காலண்டரில் இடம்பெறும் வரைபடங்களுக்கான ஓவியப்போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் 194 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே புஷ்பத்தூர் வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் தேன்முகிலனின் ஓவியமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பில் தேன்முகிலன் வரைந்த ஓவியம் நாசா காலண்டரின் நவம்பர் மாத தாளில் இடம்பெற்றுள்ளது. மாணவன் தேன்முகிலனை பள்ளி நிர்வாகிகள், முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டினர். பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களிலும் மாணவன் தேன்முகிலனிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 3 மாணவர்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள் 3 பேர் வரைந்த ஓவியங்களும் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது.

Saturday, December 22, 2018
கலெக்டருடன் பணிபுரியும் வாய்ப்பு - மாணவிகளை ஊக்கப்படுத்தும் ஆட்சியர்.
சிறந்த கட்டுரை எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள மாணவிகளை கலெக்டர் இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்குவதை அவர் வழக்கமாக செய்து வருகிறார். திருவண்ணாமலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் கனவு’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி என மொத்தம் 2,508 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் இதில் கலந்து கொண்டு சாதனை புரிகின்றனர். இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசியதாவது:
பெண் குழந்தைகள் சமுதாயத்தின் ஒரு பங்கு. அதனை எடுத்துரைக்கும் விதமாகவே தற்போது கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கடிதத்தில் மாணவிகள் தங்களது ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உயர்கல்வியில் என்ன படிக்க ஆசை, குழந்தை திருமணம் செய்யக் கூடாது என்பது குறித்து அஞ்சல் அட்டையில் எழுதலாம். இதில் சிறந்த கடிதம் எழுதிய 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்னுடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். பெண் குழந்தைகளை உங்கள் வீட்டில் உங்களுக்கு சமமாக நடத்துங்கள். அப்போது தான் சமுதாயத்திலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசினார்.

Friday, December 21, 2018
ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 18+2 = 20.
பதவி: மாவட்ட கல்வி அதிகாரி.
தகுதி:
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பதிவுக் கட்டணம் ரூ.150.
முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200.செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019. முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2019. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019. இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, December 20, 2018
எல்.கே.ஜி.,க்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம்.
தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை, அடுத்தடுத்து வர உள்ளது. அதன் பின், பொது தேர்வு மற்றும் ஆண்டின் இறுதி தேர்வுக்கு, மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. எனவே, புத்தாண்டு விடுமுறை முடிந்ததும், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை முடிக்க, தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. பல பள்ளிகளில் விண்ணப்ப பதிவு பணிகள், இந்த மாத இறுதியில் துவங்குகின்றன. இதில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, மெட்ரிக் பள்ளிகளில், பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.பெற்றோர், தங்களை கவர்ந்த, பிரபலமான பள்ளிகளில், பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என, விரும்புகின்றனர். இந்த ஆண்டு, பெரும்பாலான பள்ளிகளில், 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கை, விண்ணப்ப பதிவு நடக்கிறது. இந்த பதிவுக்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவர் பெயரில் ஜாதி சான்றிதழ், புகைப்படம் ஆகியவை தேவைப்படுகின்றன. எனவே, மாணவர் சேர்க்கைக்கு தேவையான, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல்களை தயாராக வைத்திருக்க, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஜாதி சான்றிதழ்களை, அரசின், இ - சேவை மையங்கள் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.
அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன. ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?
பெரியார் பல்கலை: எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.
அழகப்பா பல்கலை: எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை
சென்னை பல்கலை: எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.
பாரதியார் பல்கலை: எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை. எம்.எஸ்சி.,படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.
பாரதிதாசன் பல்கலை:
எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை
அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.
அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்: எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.
இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

Wednesday, December 19, 2018
எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு.
காவல் துறையில், விரல் ரேகை பிரிவுக்கு, 202, எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதிகள், அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த பணிக்கு, 40 ஆயிரத்து, 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுப்பிரிவில், 34 ஆயிரத்து, 933 பேரும்; காவல் துறையை சேர்ந்த, 2,608 பேரும், எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம், என, எட்டு மையங்களில், எழுத்து தேர்வு நடக்கிறது. காவல் துறையை சேர்ந்தோருக்கு, 22ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு, 23ம் தேதியும், தேர்வு நடக்க உள்ளது. தகுதியுடையோர், நுழைவுச்சீட்டை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு.
2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய இந்த மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, December 18, 2018
நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முடிவுகள் வெளியீடு.
நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான( நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Monday, December 17, 2018
10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்.
பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன. மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது. இதர 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மாணவர்களின் அடுத்தகட்ட உயர்படிப்பு களுக்கு உதவியாக இருக்கும். இந்தச் சூழலில் மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதமாக பொதுத்தேர்வு தேதிகளும் கடந்த ஜூன் 12-ம் தேதியே அறிவிக்கப்பட்டன. அதன் படி 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவு ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்.
11-ம் வகுப்புக்கு மார்ச் 6-ல் தொடங்கி 22-ம் தேதி வரை தேர்வு கள் நடைபெற உள்ளன. தேர்வு முடிவு மே 8-ல் அறிவிக்கப்படும். இதுபோல, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி தொடங்கி 29-ம் வரை தேர்வுகள் நடைபெறும். முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும். அதாவது மார்ச் மாதத்திலேயே பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே முதல் வாரத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையே பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 10 முதல் 12 வரையான பொதுத்தேர்வு வகுப்புகளுக்கு தேர்வுகளில் 20 சத வீதம் வரை பாடத்துக்கு வெளி யில் இருந்து கேள்விகள் கேட்கப் படும். பாடங்களுக்கு ப்ளூபிரிண்ட் தரப்படாது. அதற்கேற்ப மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு கடந்த ஜூன் முதலே பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
தேசிய நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக தேர்வு முறைகளில் கடும் கெடுபிடிகளைப் பின்பற்று வதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதற்கேற்ப காலாண்டு, அரை யாண்டு தேர்வு வினாத்தாள்களும் மிக கடினமாகவே வடிவமைக் கப்பட்டன.

Subscribe to:
Comments (Atom)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...
-
Reporter Vacancy In Kumudam ( குமுதம் இதழுக்கு நிருபர்கள் தேவை)
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாண...
-
மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்...