Wednesday, December 19, 2018

எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு.

காவல் துறையில், விரல் ரேகை பிரிவுக்கு, 202, எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதிகள், அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த பணிக்கு, 40 ஆயிரத்து, 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுப்பிரிவில், 34 ஆயிரத்து, 933 பேரும்; காவல் துறையை சேர்ந்த, 2,608 பேரும், எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம், என, எட்டு மையங்களில், எழுத்து தேர்வு நடக்கிறது. காவல் துறையை சேர்ந்தோருக்கு, 22ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு, 23ம் தேதியும், தேர்வு நடக்க உள்ளது. தகுதியுடையோர், நுழைவுச்சீட்டை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...