தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த ஆண்டு முதல் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டது. இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் முதல்தாள், இரண்டாம்தாள் என்ற முறைக்கு பதிலாக ஒரே தாளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேர்வெழுதும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடையும். புதிய அறிவிப்பின்படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...
-
Reporter Vacancy In Kumudam ( குமுதம் இதழுக்கு நிருபர்கள் தேவை)
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாண...
-
மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்...
No comments:
Post a Comment