நாசா காலண்டரில் இடம் பிடித்த பழநி பள்ளி மாணவனின் ஓவியம்.
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள காலண்டரில் பழநி பள்ளி மாணவனின் ஓவியம் இடம் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடுவது வழக்கம். 12 மாதங்களுக்கு 12 ஓவியங்கள் காலண்டரில் இடம் பெறும். இதற்கான ஓவியங்கள் உலக அளவில் போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். 4 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். 2019 காலண்டரில் இடம்பெறும் வரைபடங்களுக்கான ஓவியப்போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் 194 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே புஷ்பத்தூர் வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் தேன்முகிலனின் ஓவியமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பில் தேன்முகிலன் வரைந்த ஓவியம் நாசா காலண்டரின் நவம்பர் மாத தாளில் இடம்பெற்றுள்ளது. மாணவன் தேன்முகிலனை பள்ளி நிர்வாகிகள், முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டினர். பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களிலும் மாணவன் தேன்முகிலனிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 3 மாணவர்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள் 3 பேர் வரைந்த ஓவியங்களும் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது.

No comments:
Post a Comment