Tuesday, May 15, 2018

சட்டப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கான தகவல். சட்டட்படிப்பில் சேர விண்ணப்பம்

சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்ட கல்லுாரிகளிலும், ஒரு தனியார் சட்ட கல்லுாரியிலும், இளநிலை சட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இவற்றில், *பி.ஏ., எல்.எல்.பி., - பி.பி.ஏ., எல்.எல்.பி., - பி.காம்., எல்.எல்.பி., - பி.சி.ஏ., எல்.எல்.பி.,* ஆகிய, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளும், எல்.எல்.பி., என்ற, மூன்றாண்டு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' சட்டப் படிப்புக்கு, இன்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஜூன், 18க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.
ஹானர்ஸ் அல்லாத, பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, ஜூன், 1 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூன், 29க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புகளுக்கு, ஜூன், 27 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை, 27க்குள் பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, 10 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்ட கல்லுாரியில், உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். நேரில் விண்ணப்பம் பெற்று, அதை அஞ்சல் வழியில் அனுப்பலாம்.
மேலும், 'ஆன்லைன்' வழியிலும், இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான வசதிகள், அம்பேத்கர் பல்கலையின், http://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் உள்ளன.மொத்தம், 11 கல்லுாரிகளில், ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில் முறையே, 1,411 மற்றும், 1,541 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
சரஸ்வதி தனியார் சட்ட கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டுக்கு, ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், தலா, 39 இடங்கள் ஒதுக்கப்படும்.

டிஜிட்டல் இந்தியா இண்டர்ன்ஷிப் திட்டம்.

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொழில்நுட்ப மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ₹10,000 ஊதியமாக வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலைப் பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்பில் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Monday, May 14, 2018

செட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது ? : மாணவர்கள் பரிதவிப்பு

கல்லூரி , பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

2018-ம் ஆண்டிற்குகான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த முதுகலை பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கானோர் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த தேர்வு வினாதாளுக்கான விடைக்குறிப்புகள் இணையத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தேர்வு முடிவுக்கள் எப்போது வெளியாகும் என்ற ஏதிர்பார்ப்பில் இந்த தேர்வை எழுதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பி.எச் டி ஆராய்ச்சி படிப்பு மற்றும் உதவிபேராசிரியர் பணியிடங்களில் சேர முடியும்.

 தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. செட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்த தேர்வெழுதிய மாணவர் நாகரத்தினம் கூறும்போது," காமர்ஸ் பிரிவில் நான் இந்த தேர்வை எழுதியுள்ளேன். இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. செட் தேர்வுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போனுக்கு கால் செய்தால் யாரும் எடுக்கவில்லை. இரண்டு கல்லூரிகளில் காமர்ஸ் பணிகான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் செட் , நெட் அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும். ஆனால் செட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் அந்த பணிக்கு என்னால் விண்ணப்பிக்க இயலவில்லை" என்று கூறினார்.

Friday, May 4, 2018

நீட் தேர்விற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு நிதியுதவி. தமிழக அரசு அறிவிப்பு.

நீட் தேர்வை எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய். 1000 நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நீட் தேர்வு ஹால் டிக்கெட்,
அடையாள அட்டையை காட்டி தங்களது நிதியுதவியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில்
செய்யப்படும்.

மாணவர்களே உஷார்....மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு.


கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*
1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
2.லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
3.அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
4.மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
5.சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
6.கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
7.மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
8.கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
9.பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
10.பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
11.பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

Thursday, May 3, 2018

Wednesday, May 2, 2018

பொறியியல் பட்டபடிப்பு கலந்தாய்விற்காக மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள்

பொறியியல் பட்டபடிப்பு கலந்தாய்விற்காக
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள்
1சென்னைஅண்ணா பல்கலைக்கழகம்கிண்டி
2அரியலூர்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிஅரியலூர்
3கோவைஅரசு தொழில்நுட்பக்கல்லூரிகோவை
4கோவைஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்கோவை
5கோவைகோயமுத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிகோவை
6கடலூர்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிபண்ரூட்டி
7கடலூர்அண்ணாமலை பல்கலைக்கழகம்சிதம்பரம்
8திண்டுக்கல்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிதிண்டுக்கல்
9தருமபுரிஅரசு பொறியியல் கல்லூரிதருமபுரி
10ஈரோடுசாலை போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரிபெருந்துறை
11ஈரோடுபெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரிபெருந்துறை
12காஞ்சிபுரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகாஞ்சிபுரம்
13காஞ்சிபுரம்எம்.ஐ.டி கல்லூரிகுரோம்பேட்டை சென்னை
14கன்னியாகுமரிபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிநாகர்கோவில்
15கிருஷ்ணகிரிஅரசு பொறியியல் கல்லூரிபர்கூர்
16கரூர்கரூர் அரசு கலைக்கல்லூரிதந்தோணிமலை
17மதுரைஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்மதுரை
18மதுரைதியாகராஜர் பொறியியல் கல்லூரிமதுரை
19நாமக்கல்திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரிராசிபுரம்
20நாகப்பட்டினம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திருக்குவளை
21பெரம்பலூர்பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகீழகனவை
22புதுக்கோட்டைபுதுக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரிஅறங்தாங்கி
23ராமநாதபுரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிபுலங்குடி
24சேலம்அரசு பொறியியல் கல்லூரிசேலம்
25சிவகங்கைஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி காரைக்குடி
26தஞ்சாவூர்பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிபட்டுக்கோட்டை27தஞ்சாவூர்அரசு பொறியியல் கல்லூரிசெங்கிப்பட்டி
28நீலகிரிநீலகிரி அரசு கலைக்கல்லூரிஉதகமண்டலம்
29தேனிஅரசு பொறியியல் கல்லூரிபோடிநாயக்கனூர்
30திருவள்ளூர்முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரிஆவடி
31திருவாரூர்அரசு பாலிடெனிக் கல்லூரிவலங்கைமா
32திருவண்ணாமலைபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிஆரணி
33திருப்பூர்சிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரிகொங்கணகிரி
34திருநெல்வேலிஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்திருநெல்வேலி
35திருநெல்வேலிஅரசு பொறியியல் கல்லூரிதிருநெல்வேலி
36தூத்துக்குடிவி.ஒ.சி பொறியியல் கல்லூரிதூத்துக்குடி
37 திருச்சிபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகம்திருச்சி
38திருச்சிஅரசு பொறியியல் கல்லூரிஶ்ரீரங்கம்
39வேலூர்வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரிவேலுர்
40விழுப்புரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகாகுப்பம், விழுப்புரம்
41விழுப்புரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிதிண்டிவனம்
42விருதுநகர்வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரிரோசல்பட்டி 

தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்கள் விரைவில் வெளியீடு.

தமிழக பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
ஆண்டு முதலில் 1,6,9,11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில்  வெளியிடப்படுகிறது
 புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் வெளியிடுகிறார் என கல்வித்துறை அமைச்சர்    திரு. செங்கோட்டையன் அறிவிப்பு.

நீட் தேர்வில் எடுத்திருக்க வேண்டிய மதிப்பெண்கள் குறைப்பு

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்பிற்கு சென்ற ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என  மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் எடுத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் -262 மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் - 225 மதிப்பெண்.
மாற்றுத் திறனாளிகள் - 244 மதிப்பெண் எடுத்திருந்தால் போதும் என மருத்துவ கல்வி செயலாளர் கூறியுள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...