Tuesday, May 15, 2018

சட்டப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கான தகவல். சட்டட்படிப்பில் சேர விண்ணப்பம்

சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்ட கல்லுாரிகளிலும், ஒரு தனியார் சட்ட கல்லுாரியிலும், இளநிலை சட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இவற்றில், *பி.ஏ., எல்.எல்.பி., - பி.பி.ஏ., எல்.எல்.பி., - பி.காம்., எல்.எல்.பி., - பி.சி.ஏ., எல்.எல்.பி.,* ஆகிய, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளும், எல்.எல்.பி., என்ற, மூன்றாண்டு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' சட்டப் படிப்புக்கு, இன்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஜூன், 18க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.
ஹானர்ஸ் அல்லாத, பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, ஜூன், 1 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூன், 29க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புகளுக்கு, ஜூன், 27 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை, 27க்குள் பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, 10 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்ட கல்லுாரியில், உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். நேரில் விண்ணப்பம் பெற்று, அதை அஞ்சல் வழியில் அனுப்பலாம்.
மேலும், 'ஆன்லைன்' வழியிலும், இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான வசதிகள், அம்பேத்கர் பல்கலையின், http://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் உள்ளன.மொத்தம், 11 கல்லுாரிகளில், ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில் முறையே, 1,411 மற்றும், 1,541 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
சரஸ்வதி தனியார் சட்ட கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டுக்கு, ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், தலா, 39 இடங்கள் ஒதுக்கப்படும்.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...