கல்லூரி , பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
2018-ம் ஆண்டிற்குகான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த முதுகலை பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கானோர் எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த தேர்வு வினாதாளுக்கான விடைக்குறிப்புகள் இணையத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தேர்வு முடிவுக்கள் எப்போது வெளியாகும் என்ற ஏதிர்பார்ப்பில் இந்த தேர்வை எழுதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பி.எச் டி ஆராய்ச்சி படிப்பு மற்றும் உதவிபேராசிரியர் பணியிடங்களில் சேர முடியும்.
தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. செட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்த தேர்வெழுதிய மாணவர் நாகரத்தினம் கூறும்போது," காமர்ஸ் பிரிவில் நான் இந்த தேர்வை எழுதியுள்ளேன். இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. செட் தேர்வுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போனுக்கு கால் செய்தால் யாரும் எடுக்கவில்லை. இரண்டு கல்லூரிகளில் காமர்ஸ் பணிகான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் செட் , நெட் அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும். ஆனால் செட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் அந்த பணிக்கு என்னால் விண்ணப்பிக்க இயலவில்லை" என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...
-
Reporter Vacancy In Kumudam ( குமுதம் இதழுக்கு நிருபர்கள் தேவை)
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாண...
-
மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்...
No comments:
Post a Comment