Saturday, June 30, 2018

மீன்வள பல்கலை.,மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

மீன்வள பல்கலை.,மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் மூன்று இடங்கள்:
தூத்துக்குடி மாணவி எமிமா 199 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், புதுக்கோட்டை மாணவி பவித்ரா 198.75-ம், தேனி மாணவி ரோஷிணி 197.25 மதிப்பெண் எடுத்து 2,3-ம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-வது வாரம் நடக்கும் என துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலை சென்டாக் வெளியிட்டது.
இதில்,  அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாணவர்கள் 1,452 பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 7,993 பேரும் விண்ணப்பித்துள்ளனர்
எம்.பி.பி.எஸ் தரவரிசைப்பட்டியலை  www.centaconline.in காணவும்.

6,7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு "TAB" வழங்க முடிவு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

6, 7 மற்றும் 8 வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Friday, June 29, 2018

ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் வசதி : 2ம் தேதி முதல் அமல்

தாமதமாக வரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...
தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு முதன்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். தொடர்ந்து தாமதமாக வந்தால், அந்த நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் செயலி மூலம் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை வரும் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மாணவர்களின் இடைநிற்றல் தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பரிசோதனை திட்டம்:
 இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் அனைவரது வருகையையும், செல்போன் செயலியில் விரல் ரேகை பதிவு முறை மூலம் வருகைப்பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, தமிழகத்தில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பரிசோதனை திட்டம் திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு ஆன்லைன் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்காக, பிரத்யேகமான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் இருந்த ஒருசில நடைமுறை குறைபாடுகளும் செயல்முறை பரிசோதனைகள் மூலம் சரி செய்யப்பட்டு, முழுமையாக்கப்பட்டுள்ளது.  எனவே, அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் செல்போன் வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தியிருந்தோம். அதன்படி, தற்போதுவரை சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

செயலியின் பயன்பாடுகள்:
பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றடைந்ததும், தங்களுடைய செல்போன் செயலியை ஆன் செய்து, விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்து, எத்தனை மணிக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் ஆன்லைன் மூலம் உடனடியாக எங்களுக்கு கிடைத்துவிடும்.
எதிர்பாராத சூழ்நிலையில், செல்போன் எடுத்து வர மறந்தவர்கள், இணைய வசதியில்லாதவர்கள், தங்களுடைய தலைமை ஆசிரியரின் செல்போனில் வருகையை பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தியிருக்கிறோம்.
விரல் ரேகை பதிவின்போது, இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் (ஆப்லைன்) விரல் ரேகையை பதிவு செய்யலாம்.
இணைய சிக்னல் கிடைத்ததும் பதிவேற்றிய விபரம் சரியான நேர விபரத்துடன் எங்களுக்கு கிடைத்துவிடும். எனவே, சிக்னல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம். தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு முதன்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். தொடர்ந்து தாமதமாக வந்தால், அந்த நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறையை தொடர்ந்து, மாணவர்களின் வருகையையும் இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யும் வசதி நடைமுறைக்கு வரும். அதன்மூலம், தமிழகத்தின் கல்வித்தரம் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிகளில் சேர ஜூலை 11,12-ல் கலந்தாய்வு

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிகளில் சேர ஜூலை 11,12-ல் கலந்தாய்வு சென்னை மந்தவெளியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்த 1,820 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்.

''பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் சிந்தித்துப் பதிலளிக்கும்வகையில் 20 சதவிகிதக் கேள்விகள் இடம்பெறும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேர்வுத்துறை.
மதிப்பெண் சதவிகிதம்:
தேர்வுத்துறை இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் 1,000 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றவர்கள் 11.23 சதவிகிதம் பேர். 900 - 1000 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 12.47 சதவிகிதம் பேர். 900 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள் 75 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளனர். `நடந்து முடிந்த பொதுத்தேர்வில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தும்போது மதிப்பெண் அள்ளி வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்கும்விதமாக, ஆசிரியர்களுக்கு முன்னரே ஆலோசனை வழங்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது தேர்வுத்துறை. இதில், `அடுத்த ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்கள் யோசித்து பதிலளிக்கும் வகையில், 20 சதவிகிதம் கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்களைத் தயார்செய்ய வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படிக்காமல், பொதுத்தேர்வுக்குப் பாடப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறது

ப்ளு பிரிண்ட் முறை ஒழிப்பு:
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு, ஏற்கெனவே உள்ள ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு இன்னமும் ப்ளூ பிரின்ட் முறையில் நடத்தப்படுகிறது. ப்ளூ பிரின்ட் முறையைப் பின்பற்றுவதால் மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் தேர்ந்தெடுத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதனால், பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டும் நடத்தி முடித்து அதிக மதிப்பெண் பெற்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரப்பட்டது. மேலும் பத்தாம், பதினொன்றாம் வகுப்புக்கு ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படிப்பதால் அவர்களுக்கும் ப்ளூ பிரின்ட் முறை இருக்காது. இதனால் பாடப்புத்தகத்தை முழுமையாகப் புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும்.

Thursday, June 28, 2018

பி.இ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியீடு

பி.இ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியீடு
பி.இ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல்
https://t.co/ab3FaAmEqc
https://t.co/4IFAmdMdFg
என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தரவரிசைப் பட்டியலை tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பி.இ. படிப்புக்கான தரவரிசையில்கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி முதலிடமும், மதுரையைச் சேர்ந்த ரித்விக் 2ம் இடமும், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷினி 3ம் இடமும் பிடித்தனர்.
பிஇ படிப்புக்கு விண்ணப்பித்த 1,59,631 பேரில் 1,04,453 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் 1,76,865 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கடந்த ஆண்டு பெறப்பட்ட கட்டணமே நடப்பாண்டிலும் பெறப்படுமென்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான தரவரிசைப்படுத்தப்பட்டியல் வெளியீடு.

மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின்.
மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்
தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன, பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன
மொத்தம் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25,417 ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் ஆண்கள் 10,473 பேர் , பெண்கள் 17,593 பேர், திருநங்கை ஒருவர்
என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, June 27, 2018

6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிநடக்கிறது. மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், சிந்திக்கும் திறனைப் பெருக்கவும் கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தமிழகம் முழுவதும் திருக்குறள் போட்டியினை நடத்தி வருகிறது.
அதன்படி, புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிகுப்பம்பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி வரும் ஜூலை 22ம் தேதி நடக்கிறது. தவிர,சென்னை, மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் நகரங்களிலும் வரும் ஜூலை 21, 28, 29 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 11, 12, 18, 19 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறஉள்ளது. இதில் பங்குபெற விரும்புவோர்,விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளை அல்லது ஸ்ரீராம் சிட்ஸ், எண்: 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி: 044 - 4021 4100 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூலை 17ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
போட்டிகள் இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடக்கிறது. இடைநிலைப் பிரிவில் 6,7, 8ம் வகுப்பு; மேல்நிலையில் 9, 10, 11,12ம் வகுப்புகள்; கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

மகளிரியல் துறையில் புதிய படிப்புகள் அறிமுகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறையில் எம்.ஏ., எம்.பில்., படிப்புகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தேவை சார்ந்த பல சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகிறது.
 முதுகலை மற்றும் எம்.பில். பாலினவியல் படிக்க ஏதாவது ஓர் இளங்கலை படிப்பு முடித்த மாணவர்கள் (அறிவியல், சமூக அறிவியல், மொழியியல், சட்டம், பொறியியல்) விண்ணப்பிக்கலாம்.
 மேலும் தற்போது படித்து கொண்டுள்ள மாணவர்கள், கூடுதலாக மற்ற படிப்புளையும் படிக்க வசதியாக மகளிரியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த சான்றிதழ் படிப்புகளான பேஷன் டிசைனிங், மகளிர் தொழில் முனைவு, ஆய்வுத்திறன்கள், வாழ்வியல் திறன்கள் மற்றும் பாலினவியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க www.bdu.ac.in என்ற இனையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 10ம் தேதி ஆகும்.
மேலும் விபரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் மகளிரியல் துறையை அணுகலாம்.

சென்னை புறநகரில் புதிய கல்லூரிகள்

சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் குறைவாக உள்ளன. தனியார் கல்லூரிகள்தான் அதிக அளவில் உள்ளன.
மறைமலை அடிகள் நினைவாக மறைமலைநகரில் கலைக் கல்லூரி தொடங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 45 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக பெரும்பாக்கத்தில் புதிய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
எனினும், மாணவர்கள் நலன் கருதி எதிர்காலத்தில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 -இல் சென்னையில் நடக்கிறது

தமிழகத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்புரட்சி குறித்த தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கினை நடத்தி வருகின்றன.
நிகழாண்டும் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
தொழிற்புரட்சி 4.0
நாம் தயாராக இருக்கிறோமா?' (Industrial Revolution (IR) 4.0: Are we prepared?) என்ற தலைப்பில், நிகழாண்டுக்கான இக்கருத்தரங்க போட்டி நடைபெறவுள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
மாணவர்கள் ஆங்கிலம், ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.  இதில் பங்கேற்கும் மாணவர்கள் ஆறு நிமிஷங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், இரண்டு நிமிஷங்கள் நடுவர்களின் கேள்விகளுக்கு மேற்குறித்த தலைப்பையொட்டி, பதிலளிக்கும் வகையிலும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம், ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பள்ளி அளவில் ஜூலை 10 -ஆம் தேதிக்குள்ளும், கல்வி மாவட்ட அளவில் ஜூலை 24 -ஆம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவில் ஆகஸ்ட் 2 -ஆம் தேதிக்குள்ளும் கருத்தரங்குகளை நடத்தி முடிக்க வேண்டும்.  பள்ளி அளவில் தலைமையாசிரியர், கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர், வருவாய் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாக செயல்பட வேண்டும்.  பள்ளி அளவில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை கல்வி மாவட்ட அளவிலும், கல்வி மாவட்டத்தில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை வருவாய் மாவட்டத்திலும், வருவாய் மாவட்டத்தில் முதல் இடம் பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க இயலும்.
மாநில அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 264 பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஜூலை 9 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கவும், அதற்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2018-19 -ஆம் கல்வியாண்டில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கவும், இப்பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 இந்த புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அரசு கல்லூரிகளில் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக கடந்த ஆண்டு 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், போலி இருப்பிடச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க, கலந்தாய்வில் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள்:
கலந்தாய்வில் பங்கேற்போர் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியில் வழங்கிய ஆளறிச் சான்றிதழ், கடைசியாகப் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின் ஆளறிச் சான்றிதழ்  (bonafide certificate)ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துவோருக்கு), குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு, பெற்றோருக்கும் மாணவருக்குமான உறவைக் குறிப்பிடும் ஆவணம் ஆகிய அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பெற்றோருக்கான ஆவணங்கள்:
மேலும், அந்த மாணவரின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பட்டயம் அல்லது இளநிலை அல்லது தொழில்படிப்பை படித்ததற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் (பொருந்துவோருக்கு) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அசலும் நகலும்:
கலந்தாய்வில் பங்கேற்போர் இந்த ஆவணங்களின் அசலைக் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். இதுதவிர ஆவணங்களின் நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.  அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும்; ஆவணங்களின் நகல்களைக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும்.
 மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பல்கலையில் புதிதாக 2 பட்ட மேற்படிப்புகள் துவக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக இரண்டுபட்ட மேற்படிப்புகள் துவக்கப்பட்டு்ள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பாஸ்கர் கூறியது, நடப்பு கல்வியாண்டில் புதிதாக இரண்டு முதுகலை வகுப்புகள் துவக்கப்படுகின்றன.
எம்.எஸ்.சி.,டேட்டா அனலிடிக்ஸ் என்ற படிப்பும், எம்.எஸ்,சி.,சைபர் செக்யூரிட்டி என்ற படிப்பும் துவக்கப்படுகின்றன.
பி.எஸ்.சி.,பிசிஏ, பிஇ படித்தவர்கள் இதனை படிக்கலாம்.
நெல்லை பல்கலையின் தகவல்தொழில்நுட்பத்துறை, புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகள் இணைந்து இந்த வகுப்புகளை நடத்துகின்றன. இதனை படிப்பதன் மூலம் பல்வேறு தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

மரம் வளர்த்தால் 'போனஸ் மார்க்'

ராய்ப்பூர்,சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மரக்கன்று நட்டு, நான்கு ஆண்டுகள் வரை வளர்க்கும் மாணவர்களுக்கு, போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ராஜ்நந்த்காம் மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர்.
2014ல், அப்போதைய தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும், பள்ளி வளாகம் அல்லது கிராமப் பகுதியில் மரம் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான, மா, வேம்பு, நாவல், ஆல மரம், அரச மரம் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அவற்றை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நான்கு ஆண்டுகள், மரம் வளர்த்த, மாணவ - மாணவியருக்கு, பிளஸ் 2 செய்முறை தேர்வில், போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.
சமீபத்தில், பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவர்கள் நட்ட மரக்கன்றுகள் வளர்ந்து, சிறிய மரங்களாக வளர்ந்து, பசுமையாக காணப்படுகிறது.

Tuesday, June 26, 2018

புதிய பாடப்புத்தகங்கள் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி!

நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.
ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதனால் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.
அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்.

பி.இ. கலந்தாய்வு: நாளை மறுநாள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை மறுநாள் (ஜூன் 28) வெளியிட உள்ளது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
உடனடியாக மாணவா்களின் பார்வைக்காக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவை செய்திருந்தனா். இவா்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

 11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர்திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கேள்வித் தாள் நடைமுறையில் மாற்றமில்லை.

பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமானதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெறும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இதுவரை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், திடீரென, பிளஸ் 2 அல்லாத, நீட் நுழைவு தேர்வு வினாக்களை சந்திக்கவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017-18ல்,தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவசபயிற்சி பெற்ற, 1,300 மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 20 பேர் மட்டுமே, மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது. இந்த ஆண்டு, மருத்துவ படிப்பில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீட் சிறப்பு பயிற்சி மட்டுமின்றி, கல்வி ஆண்டு துவக்கம் முதலே, வகுப்புகளில் இருந்தே, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்று இருந்தால், அது பற்றி
சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
நீட் தேர்வு வினா வங்கியை பயன்படுத்தியும், அதிலுள்ள, எம்.சி.க்யு., என்ற, பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய வினாக்களின் மாதிரியை பயன்படுத்தியும்,பள்ளியின் மாதிரி தேர்வுகளில்வினாக்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Monday, June 25, 2018

சேலத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 8 முதல் ஆக.7 வரை விண்ணப்பிக்கலாம். சேலம், கோவை, மதுரை, நீலகிரி, நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு புதுச்சேரி: தேசிய ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேருவதற்கு ஆண்கள் மட்டும், வரும் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வரைமுறைகள்:
நுழைவுத் தேர்வு எழுதும் மாணவருக்கு 2019ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி அன்று பதினொன்றரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்:
மாணவர்களை தேர்வு செய்யும் முறை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆங்கிலத் தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை கணிதத்தேர்வும் நடைபெறும்.
டிசம்பர் 2ம் தேதி காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரை பொது அறிவுத்தேர்வு நடைபெறும் கணிதம் மற்றும் பொது அறிவுத்தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நேர்முகத் தேர்வு 2019 ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும்.
நேர்முகத் தேர்வுக்குப்பின் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தேர்வு மையம் குறித்த தகவல், மாணவர்களுக்கு இணை இயக்குனர் அலுவலக தேர்வுப்பிரிவில் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் பெற்றிட, அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், 'THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL HAAVAN, DEHRADUN, (BANK CODE 01576), UTTARKHANDகிளையில் மாற்றத்தக்க வகையில் கேட்பு வரைவோலை அனுப்ப வேண்டும்.

கட்டண விபரங்கள்:
 பொதுப்பிரிவினர் ரூ.600க்கும் (விரைவு அஞ்சல்), அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555(விரைவு அஞ்சல்) தொகைக்கு கேட்ப வரைவோலையாகவோ (Account payee Bank Demanfd Draft)அல்லதுwww.rimc.gov.in என்ற வலைதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்துச்சீட்டு (Challan) மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILTARY COLLEGE, DEHRADUN CANTONMENT, UTTARANCHL 248 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணை இயக்குனர், இரண்டாம் தளம், அ-அடுக்கம், காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி 605 005 என்ற முகவரிக்கு, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்வு ஜுலை 8ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிக்கு நெட் தேர்வு கட்டாயமாகிறது. எனவே இந்த ஆண்டு நெட் தேர்வு ஜுலை 8 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை தேர்வு எழுதுவோரின் நலன் கருதி ஜூலை 8ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட் லிங்க்:
http://cbsenet.nic.in

Monday, June 18, 2018

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன; தேர்வு முடிவுகளை aiimsexams.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
 அகில இந்திய அளவில் மேகாக் அரோரா முதலிடம் பிடித்துள்ளார்

Friday, June 15, 2018

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று தோட்டக்கலை பட்டய படிப்புகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதைப்பற்றிய விபரங்கள்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறி மகத்துவ மையத்திலும், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு நடப்புக் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்விரண்டு மையங்களிலும், மாணவர்கள் பயில்வதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் வசதிகளை உருவாக்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
மாதவரத்தில் இயங்கி வரும் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு மையமும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடத்தப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக "இரு நூற்றாண்டு பசுமைப் புல்வெளி" எனும் புதிய பூங்கா ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
 இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.
ஜிப்மர் தேர்வு முடிவுகள் வெளியீடு...!

கடந்த 10ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த ஜிப்மர் செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 24 இளங்கலை எழுத்தர் பணியிடங்கள், 91 செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 14, 2018

இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI)
ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இந்நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது.
இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Wednesday, June 13, 2018

அன்பார்ந்த நண்பர்களே TNSET தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.
மேலும் அதைப்பற்றிய விபரங்கள்:
Cutoff list:




Qualified list:





நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலையில் ஏதேனும் ஒருபாட பிரிவின் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில்  சேரும் மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 01
2. Centre for Water Resources – 01
3. Division of Structural Engineering – 01
4. Chemistry – 03
5. Electronics & Communication Engineering – 10
6. Electrical & Electronics Engineering – 01
7. English – 01
8. Industrial Engineering – 03
9. Management Studies – 02
10. Manufacturing Engineering – 01
11. Mathematics – 08
12. Mechanical Engg. (Internal Combustion Engg) – 01
13. Mining Engineering – 02
14. Media Sciences – 01
15. Physics – 03
16. Printing Technology – 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.20,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Tuesday, June 12, 2018

குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு சிறப்பு செய்தி.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களின் விகிதம் குறைந்து வருகிறது. இது கவலைக்குரிய ஒரு நிகழ்வு. தமிழகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.

தமிழ்வழியில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்மொழியில் வினாத்தாள்கள் இல்லாமை , தமிழ் மொழியில் உரிய பாட நூல்கள் இல்லாமை , ஆழமான கட்டுரைகள் தமிழில் கிடைக்காமை, தமிழ் மொழியில் விடைத்தாள்களை திருத்தம் செய்து தர வழிகாட்டிகள் இல்லாமை, தனி வகுப்புகளுக்கு மிகப்பெரிய பொருள் செலவு போன்றவை அவற்றுள் சில.

இவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட பல தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். இதற்கு தமிழ் வழியில் சிவில் சர்வீஸ்சஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சில நண்பர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேவைகளைத் தெரிவிக்க இணைப்பில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் விவரங்களைத் தெரிவிக்கவும். இந்தத் தேவைகளை ஆய்வு செய்த பிறகு மாணவர்களுக்கு உதவ சில முன்னெடுப்புகளைச் செய்ய உள்ளோம்.

மாணவர்களுக்கு உதவ ஆர்வம் உள்ள தன்னார்வலர்களும் தங்களை இப்பணியில் இணைத்துக்கொள்ளலாம்.

கூகுள் படிவம் இணைப்பு :
https://goo.gl/forms/vh6RtkAyOT0ODzuE2

தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களை ஒருங்கிணைக்க "முதன்மைத் தேர்வு" என்ற telegram குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பல தீவிரமான மாணவர்கள் இக்குழுவில் விவரங்களை பகிர்ந்து மற்றவருக்கு உதவி வருகின்றனர். சிவில் சர்வீசஸ் தேர்வு தொடர்பான வழிகாட்டுதலை பெற விரும்பும் மாணவர்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம். இது வணிக நோக்கமற்ற தன்னார்வ குழு. இக்குழுவில் இணைய விரும்புபவர்கள்குழுவின் நெறிமுறைகளின்படி நடந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு: https://t.me/joinchat/ApOpP0MlhRe5KAVqgeCD0Q

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

க.இளம்பகவத்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் விநியோகம். வரும் 28ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் முதல்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. செய்யப்பட உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடுக்கு போக 2,594 இடங்கள் உள்ளன. 2 அரசு பல்நோக்கு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 30 போக 170 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் நேற்று முதல் விநியோகிக்கப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பெறுவதற்கு ஜூன் 18ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் தேர்வு குழுவுக்கு சென்று சேர ஜூன் 19ம் தேதி கடைசி நாள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், தேர்வுக்குழு மருத்துவ கல்வி இயக்ககம், பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010.
ஜூன் 19ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக் கட்டணம் :
மேலும், அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500ம், சுய நிதி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1000ம் செலுத்த வேண்டும்.

சிறப்பு ஒதுக்கீடு பற்றிய விபரங்கள்:
அரசு கல்லூரிகளில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பத்துடன் சேர்த்து சிறப்பு ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒரே உறையில் அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டிற்கும் ரூ.100 வீதம் வரைவு காசோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் கட்ட தேவையில்லை:
அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் டிடி இணைக்க தேவையில்லை. இவர்கள் விண்ணப்ப மனுவுடன் சாதி சான்றிதழின் நகல் சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

காசோலை முகவரி :
வரைவு காசோலையை the secretary, selection committee, kilpauk, chennai-10 என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org, www.tnmedical selection.org இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு பற்றிய விபரங்கள்:
இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

Saturday, June 9, 2018

திருச்சியிலுள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை.

திருச்சியிலுள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் தகவல் தொடர்பியல் துறையில் 2 பெண் உதவி பேராசிரியர்கள் தேவை.
தகுதி:
women candidates with , PG(above 70 %) ,  NET/SET or PhD can apply .

Friday, June 8, 2018

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழக அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக மொத்தம் 14 கல்லூரி விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் 9 விடுதிகள் மாணவர்களுக்காகவும், 5 விடுதி கள் மாணவியருக்காகவும் நடத்தப்படுகின்றன. இவற்றில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரலாம்.
இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறிப்பிட்ட விகிதாச் சார அடிப்படையில் சேர்க்கப்படுவர்.
 உணவும், தங்குமிடமும் இலவசம்.

வரம்புகள்:
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 இருப்பிடத் தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாதது.
 தகுதியுடையவர்கள்விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினி கள் அல்லது  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத் தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கொண்டு வர வேண்டியவை:
விடுதியில் சேரும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க வேண்டும்.

தனி இடங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Thursday, June 7, 2018

பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை (08.06.2017) தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை (08.06.2017) தொடங்குகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்ற மாவட்டங்களில் ஜூன்14ம் தேதி வரையிலும், சென்னையில் ஜுன்17ம் தேதி வரையிலும் நடக்கும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த மாணவர்கள் தங்களது  அசல் சான்றிதழ்களை  கொண்டு வர அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தக்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்வு:
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் துணைத் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தக்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும்.
தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் ஜூன் 11, ஜூன் 12 ஆகிய இரு தேதிகளில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
கொண்டு வர வேண்டியவை:
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.



பத்தாம் வகுப்பு தேர்வு: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 11, 12 ஆகிய இரு தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள மார்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500 என மொத்தம் ரூ.625-ஐ செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Wednesday, June 6, 2018

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச CA பயிற்சி, தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tuesday, June 5, 2018

11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜூன் 7முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.

11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜூன் 7முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது என்று அரசுதேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.135 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது

Monday, June 4, 2018

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19-ந் தேதி கடைசி நாளாகும் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வை பொறுத்தது. மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடர்பான தகவலை பெற www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...