அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.
அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013
2.
அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636 011
3.
அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627 007
4.
அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004
5.
தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் 632 002
6.
அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635 104
7.
பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 004
8.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641 014
9.
தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625 015
தகுதி :
i)
விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராவர்.
ii)
விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
1)
விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் நேரிடையாக ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
2)
ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த பின்பு அதை பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் நாள்
ஆன்-லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்
துவங்கும் நாள் : 05.04.2018
முடிவுறும் நாள் : 10.05.2018, 4.00 மணி வரை
பதிவுக் கட்டணம்
விண்ணப்பதாரர் ரூ.600/- (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.300/-)க்கான கேட்வு வரைவோலையினை (05.04.2018-க்கு முன்னர் பெற்றிருக்கக் கூடாது.) “The Secretary, Part time B.E. /
B.Tech. Admissions, Coimbatore”, payable at Coimbatore என்ற பெயரில் பெற்று பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவுக் கட்டணத்திற்கான கேட்பு வரைவோலையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்படும்.
விவரங்கள்
மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO
CANDIDATES”பக்கத்தில் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவுக் கட்டணத்துடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
The Secretary,
Part time B.E. / B.Tech. Admissions,
Coimbatore Institute of Technology,
Coimbatore 641 014
keywords: Part Time, B.E , M.Tech, Part Time B.E / M.Tech,part time engineering course

No comments:
Post a Comment