Sunday, April 8, 2018

TN TET தேர்வு தேதி அறிவிப்பு ; 3030 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)


ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 3030 காலிபணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும் என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TN TET ) உத்தேச தேதியும்  வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையின் படி, ஆசிரியர் தகுதி தேர்வுவானது (TN TET )  அக்டோபர் 6 மற்றும்  அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது ஜுலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வானது  ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1883 பணியிடங்களுக்கான உதவி பேராசியர் தேர்வானது ஜுன் இரண்டாவது வாரத்தில் நட்த்தப்படும் என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.

மேலும் விரங்களுக்கு : http://trb.tn.nic.in



Keywords : Tamil Nadu Teacher Recruitment Board ,TN TRB, Lecturer, Assistant professor, Elementary Education officer, Tamil Nadu Teacher Eligibility Test , TN TET  , தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம்

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...