Sunday, April 1, 2018

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஊராட்சி செயலர் வேலை


திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, களக்காடு மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் தவிர ஏனைய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 34 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பிட 28.03.2018 தேதி முதல் 13.04.2018 தேதி வரை சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள்  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)யால் தகுதியுள்ளவர்கள் வசமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராகவும் அதே ஊராட்சி ஒன்றியத்தில் அவ்வுராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சிகளில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பி.வ.ஃ மி.பி.வ. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான இதர தகுதிகள், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களின் விபரம், இன சுழற்சி இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் http://www.tirunelveli.nic.in/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 28.03.2018 தேதி முதல் 13.04.2018 தேதி வரை மேற்படி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேரிவிக்கப்படுகிறது.புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 28.03.2018 தேதி முதல் 13.04.2018 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் சம்பந்தப்பட்ட தனி அலுவலர்களின்  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணபத்தை பதிவிறக்க (download) செய்ய   : http://www.tirunelveli.nic.in/tnv_panchayat.html




    Keywords : Panchayat Secretary , Tirunelveli, nellai, நெல்லை, திருநெல்வேலி, ஊராட்சி செயலர், Direct appointment, education news in tamil, employment news in tamil, exam news in tamil, வேலைவாய்ப்பு செய்திகள், கல்வி செய்திகள் ,தேர்வு செய்திகள், கரியர் தமிழ், Career Tamil. Job ,vacancy, work.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...