2018-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ ( TANCET - Tamilnadu Common Entrance Test) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல் கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
இந்தாண்டுக்கான டான்செட் தேர்வுக்கு 02-04-18 முதல் 23-04-18 வரை ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
தேர்வு நடைபெறும் நாள்
எம்.சி.ஏ - 19-05-18 காலை 10 மணி முதல் 12 மணி வரை
எம்.பி.ஏ - 19-05-18 மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - 20-05-18 காலை 10 மணி முதல் 12 மணி வரை
விண்ணப்ப கட்டணம்
பொது / பிற்படுத்தபட்ட வகுப்பினர் - ₹500
தாழ்த்தப்பட்ட / பழங்குடி வகுப்பினர் - ₹250
மேலும் விபரங்களுக்கு : https://www.annauniv.edu
டான்செட் தேர்வு குறித்த அறிவிப்பு
Keywords: TAMIL NADU COMMON ENTRANCE TEST, TANCET 2018,M.B.A., M.C.A., M.E. , M.Tech. , M.Arch. ,M.Plan.,DEGREE PROGRAMMES,
ANNA UNIVERSITY, CHENNAI ,


